நண்பனுக்கு........................
என் அருமை நண்பனுக்கு உன் தோழி எழுதுவது
பல காலம் பேசாமல் இருந்தோம்
சில காலம் பேசிக்கொண்டே இருந்தோம்
நன் யாரென்றும் நீ யாரென்றும் அறியாமல்
நம் நட்பு ஆரம்பித்தது
நம் இருவரும் பேசிகொள்ளவில்லை என்றாலும்
மனதளவில் ஒன்றாகவே இருந்தோம்.
உன்னிடம் பேசமாட்டேனா என்று ஏங்கிய காலங்கள் எத்தனையோ!
உன்னுடன் இருக்க வேண்டும், பழக வேண்டும் என்ற
எண்ணத்தை தவறாக புரிந்துகொண்டு காதல் என்ற பெயரை சுட்டினேன்.
நண்பா காதலால் நம் பிரிந்தபோதும், நட்பால் என்றும் இணைந்திருந்தோம் .
என் கவலைகளை களைந்த என் நண்பனே
திடிரென்று என்னிடம் பாராமுகம் காட்டுவதேன்?
நீயும் என்னை விரும்பினாய் என்று தெரிந்துகொண்டதற்காக
இவ்வளவு பெரிய தண்டனை?
எப்போது உன் மௌனத்தை களைவாய்?
என்னிடம் மறுபடியும் எப்போது பேசுவாய்?
விடைதெரியாமல் விடைக்காக காத்திருக்கும் உன் தோழி!!!!!!!!!!!!!!!!! to my friend vijaykarthic